Wednesday, November 18, 2009

நேயத்தின் திரவங்கள்

உவந்து வழங்கப் பெறுவதான

ஒரு முத்தம்

மடிசாய்ந்து கிடக்கையில் நெற்றில் சொட்டும்

துளிக் கண்ணீர்

தோள்  சாய்கையில் காதுமடல்களில் தடவிக் கொள்கிற

உச்சி வகிட்டு எண்ணெய்

உன் உள்ளங்கையை கன்னத்திற்கு கொடுத்து

உறங்கும் மதியத்தூக்கம் கை வியர்வை

நேயத்தின் திரவங்கள் கூடலை கடந்தும்

உயிர் வளர்ப்பன (1994 )

6 comments:

cheena (சீனா) said...

அன்பின் இராகவன்

அருமை அருமை 1994 கவிதை - ( இளவயதுக் கவிதையா ) - நேய திரவங்கள் கூடலைக் கடந்தும் உயிர் வளர்ப்பன

நல்வாழ்த்துகள் இராகவன்

நேய விருப்பம் said...

மிக்க நன்றி ஐயா சீனா...

இராகவன்,

விக்னேஷ்வரி said...

வித்தியாசமான சிந்தனை. ரொம்ப நல்லா இருக்கு.

S.A. நவாஸுதீன் said...

அருமை இராகவன்

Thenammai Lakshmanan said...

//நேயத்தின் திரவங்கள் கூடலை கடந்தும்

உயிர் வளர்ப்பன //

மனித நேயம் கலந்த திரவங்கள் அருமை
நல்லா இருக்கு ராகவன்
போட்டிக்கு எழுதலாமே
இது நல்லா இருக்கே ராகவன்

Sakthi said...

நன்று நண்பரே...! அன்புடன் சக்தி..!

Post a Comment